தாயென்று வந்த காதலன்---பாடல்---

ஆராரிராரோ நான் இங்கு மெட்டில் :


பல்லவி :

பூவோடு மோதும் பூந்தென்றல் போல
வாராயே என்னுயிரே...
தாலாட்டும் தாய் நீயே...

பாதை தேடும் கண்களோ?...
பாசம் தேடி நின்றதே
கோவில் தோன்றும் தெய்வமே
எனை நீ அணைத்தாயே
கண்ணா உந்தன் நெஞ்சினிலே
உயிரின் தேடல் வாழ்கிறதே...

பூவோடு...


சரணம் 1 :

பால் வற்றாத நிலவின் கிண்ணம்
நான் நீந்திட தந்தாயே...
கால் செல்கின்ற பூமி எங்கும்
என் உடல் தாங்கி நடந்தாயே...

இதயத்தில் வேர்க்கின்ற போது
மூச்சாக வந்தாயே...
உயிருக்குள் உறவென்ற மொழியில்
உனை எழுதி வைத்தாயே...
சுமந்தாய் நீ மீண்டும் என்னை
தேனாய் பொங்கும் காதலின் கூட்டில்...

பூவோடு...


சரணம் 2 :

வான் வார்க்கின்ற பூமழை போன்று
என் உள்ளத்தில் குதித்தாயே...
நான் காண்கின்ற சோகம் மறக்க
நீ அன்பென்று மலர்ந்தாயே...

ஆனந்த விளக்குகளில் சுடர்கின்ற ஒளியும் நீ
சுடுகின்ற சூரியன் போலே இருள்நீக்கும் சந்திரன் நீ...
பிறந்தேன் நான் காதல் மடி
நீயே எந்தன் உலகாய் வாழ...

பூவோடு...


...இதயம் விஜய்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 4:42 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 77

மேலே