நட்பு

ஆழ்கடலில் தோணியில் நண்பர் இருவர்
அமைதியாக பயணிக்க , எங்கிருந்தோ
வந்தது ஓர் புயற்காற்று , காற்றில் சிக்கியது
தோணி , தத்தளித்து கடைசியில் ஓர்
பாறையில் மோதி தோணி உடைய நண்பர்
இருவரில் ஒருவன் தீவின் புல்வெளியில்
வீழ்ந்தான் உயிர்த்தப்பி, வீழ்ந்த அவன்
தன் நண்பனைத் தேடுகிறான் ; அவன்
அங்கு உடைந்த தோணியில்
அடிபட்டு கிடக்க இவன் நீந்தி போய்
உயிர் நண்பனை மீட்டு வந்து தீவை
அடைகின்றான் இருவரும் இப்போது
மீட்டுக்கப்பலுக்கு காத்திருக்கின்றார்

தோணி மூழ்கியது புயலில் அடிபட்டு
மூழ்கவில்லை நட்பெனும் தோணி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Mar-19, 5:19 pm)
Tanglish : natpu
பார்வை : 1239

மேலே