என்ன நடக்குமோ---பாடல்---
காதலின் தீபம் ஒன்று... மெட்டில்...
பல்லவி :
வீதிகள் தோறும் கட்சி
கூட்டமேனோ?... நம் நாட்டில்... (2)
ஊழலின் அச்சம் நெஞ்சில்
கோடையின் வெப்பம் கண்ணில்
வருத்தமென்னைத் தீயில் வாட்ட...
வீதிகள்...
சரணம் 1 :
வார்த்தையில் பொய்கள் உண்டு
வந்ததே துன்பம் அன்று... (2)
மண்ணையே ஏலம் விட்டு ஆ.ஆ.ஆ..ஆஆ...
மண்ணையே ஏலம் விட்டு மந்திரி போவதோ?...
நம்பியே வாழும் மக்கள் நடைபிணம் ஆவதோ?...
என்ன நாசம் செய்யுமோ?...
வீதிகள்...
சரணம் 2 :
கொள்கையோ?... குப்பை போல
நாத்தமும் வீசிச் செல்லும்... (2)
கல்வியே காசு என்னும் ஆ.ஆ.ஆ..ஆஆ...
கல்வியே காசு என்னும் மெத்தையில் தூங்குமோ?...
சட்டமோ?... காற்றில் ஆடும் அரசியல் ஊஞ்சலோ?...
எல்லாம் நம்மைக் கொல்லுமோ?...
வீதிகள்...