இது இயற்கையின் நீதி---பாடல்---

சொந்த மெட்டில்...


பல்லவி :

ஆண்டவன் படைத்த வீதியிலே
வரும் மேடு பள்ளங்கள் நிலையில்லையே...
வாழ்ந்திட வகுத்த நீதியிலே
வரும் இன்பத் துன்பங்கள் தொலைவில்லையே...

பட்டக் காயங்கள் அது ஆறிப் போகும்
தொட்டப் பாவங்கள் அது தேடிக் கொல்லும்... (2)

இது இயற்கையின் பாதை
மனிதன் இதை மாற்ற முடியுமோ?...

ஆண்டவன்...


சரணம் 1 :

வாழும் போது சொர்க்கம் காண்போர்
இறந்தப் பின்னால் நரகம் கூடப் போகலாம்...
வாழும் போது நரகம் காண்போர்
இறந்தப் பின்னால் சொர்க்கம் சென்றும் வாழலாம்...

அடித்து அடித்துப் பணிவைப் பெறுவார்
அவர் புனிதன் என்ற வர்க்கமில்லை...
வறுமை நினைத்துப் பணிந்து நடப்பார்
அவர் அடிமை என்று அர்த்தமில்லை...

பிறப்பு ஒன்று தான் உனக்கும் எனக்கும்
இறப்பும் ஒன்று தான் உனக்கும் எனக்கும்
இடையில் ஏன் இந்தத் திருட்டுப் பழக்கம்
அது பேய்கள் நடத்தும் ஆட்சியின் வழக்கம்...

ஆண்டவன்...


சரணம் 2 :

பசித்து வாடும் ஏழைக் கூட்டம்
உழைப்பைத் தொடர்ந்தால் பிறரின் பசியை அடக்கலாம்...
ருசித்து வாழும் பணத்தின் கூட்டம்
உழைக்க மறந்தால் பிச்சை எடுத்தல் நடக்கலாம்...

அடுத்தோர் உழைப்பைச் சுரண்டிப் பிழைப்போர்...
கிடைத்தப் பொருளைப் பகிர்ந்து கொடுப்போர்
அவர் வணங்கத் தோன்றும் சாமி ஆவார்...

பிறந்து பார்க்கையில் உலகம் தெரியும்
இறந்து பார்க்கையில் உலகம் புரியும்
உணர்த்த தான் இந்த வாழ்க்கைப் பயணம்
அதை உணர்த்தி இறைவன் ஆடுவான் நடனம்...

ஆண்டவன்...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 5:42 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 31

மேலே