சிலிர்ப்பாய் உடல் களித்து

அதிகாலை வரை உலகை கட்டுப்படுத்திய இரவு
அயர்ச்சியில் அங்குல அங்குலமாய் அகல
ஆகாய பறவையினங்கள் ஆர்ப்பரித்தன
ஆவினங்கள் முதற்கொண்டு அனைத்தும் விழித்தன

சில்லென்று மென்காற்று மேனியில் பட
சிலிர்ப்பாய் உடல் களித்து மகிழ்ந்திட
சிறிதான உற்சாகம் உள்ளத்தில் குதிகொள்ள
சிவப்பான கீழ்வானம் உலகிற்கு கம்பளம் விரித்தது

பல காலமாய் பக்குவபட்ட மரங்கள் பம்மி நிற்க
பாதம் ஓரிடத்தில் நிற்கா நாய்கள் பலமாய் குரைக்க
சாலை நெடுகிலும் சாரை சாரையாய் மனிதர்கள்
சமகால சவாலை எதிர்கொள்ள சாரத்துடன் சென்றனர்

ஒவ்வொரு நாளும் இவ்வாறே விடிய
ஒவ்வாத எண்ணத்தில் ஒவ்வொருவரும் உழல
ஒன்றோடு ஒன்றாய் நிகழ்வுகள் பிணைய
ஒதுங்கியே வாழ்கிறோம் உயர்வு பெற்ற மனிதராய்.
--நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (22-Mar-19, 7:50 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 61

மேலே