தீர்ந்த முத்தங்கள்

காதலனே...காதலனே...
என் வாழ்வின் நாயகனே...

ஒற்றைப் பார்வையில்
நீ உரசி சென்றாய்
சின்ன சிரிப்பில்
நீ மனதில் நுழைந்தாய்...

கட்டில் மேல் நீ புத்தகமே
கற்றே புரிந்தேன் மெல்லினமே...

உன் விரல்கள் மேவும்
மெல்லிய ராகம்
உயிர் செல்கள் எல்லாம்
இசைத்திடும் தாளம்...

நித்தம் நித்தம்
உன் நினைவுகள் வந்து
மொத்தம் முத்தம்
தீர்ந்தே போகும்...

எழுதியவர் : மதனகோபால் (23-Mar-19, 8:51 am)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : theerntha muthangal
பார்வை : 285
மேலே