காதல்

அவள் அழகைச்சொல்ல கண்கள்
என் கண்கள், ஆனால் கண்களுக்கு
தெரியாது அவள் என்மீது வைத்திருக்கும்
காதல் ,அது அவள் இதயம் ஒன்றே அறியும்;
அந்த இதயத்தை நான் அறிவது எவ்வாறு
என் இதயம்கொண்டு, அவளோடு பழகும்போது,
இதயங்கள் ஒருபோதும் பொய்ப்பதில்லை
அதனால்தான் இறைவனையும் நாம்
நேசிப்பது இதய பூர்வமாய் ; அவள் என்னிடம்
சொன்னாள், 'அன்பே நீ என் இதயம் , உன் இதயத்தில்
எனக்கோர் இடம் எனக்குமட்டுமே தருவாயா ' என்று
கேட்க அவள் காதல் புரிந்தது எனக்கும்
இதயங்கள் இப்போது ஒன்றான உயிருக்குள் உயிராய்
அழகைத்தாண்டி இருக்கும் அழியாச்சின்னம் காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Mar-19, 3:59 pm)
Tanglish : kaadhal
பார்வை : 252
மேலே