படிப்பது எப்படி

சபையிலாகட்டும் தனியாகவே படிப்பதாகட்டும் எப்படிப் படிப்பது.? அதற்கு 6 குறைகளை அகற்றிப் படிக்க வேண்டும் என்று பாணிணீய சிக்ஷா கூறுகிறது.



ஏற்றியும் இறக்கியும் கண்டபடி உச்சரிக்கக் கூடாது
வேக வேகமாகப் படிக்கக் கூடாது
படிக்கும் போது தலையை ஆட்டிப் படிக்கக் கூடாது
எழுதியபடி படிக்கக் கூடாது (இலக்கணப் பிழைகளுடன்)
எதைப் படிக்கிறோமோ அதை நன்கு புரிந்து கொள்ளாமல் படிக்கக் கூடாது
தாழ்ந்த குரலில் படிககக் கூடாது (கணீரென்ற குரலில் அனைவரையும் கவரும் வண்ணம்) படிக்க வேண்டும்
செய்யுளைப் பார்ப்போம்:-

கீதோ ஷீக்ரீ சிரக்கம்போ ததா லிகித பாடக: |

அனர்த்தக்ஞோல்ப கண்டச்ச ஷடதே பாடகாதமா: ||



இதன் ஆங்கில மொழிபெயர்ப்பை அழகாக எஸ்.பி. நாயர் (S B Nair) செய்துள்ளார் இப்படி:-



One who reads in a sing-song manner, reads too quickly, shakes his head while reading, reads as written (without correcting scribal errors), does not understand the sense, and has a faint voice – all these six are inferior reciters (readers)

பழைய கால குருகுல முறையில் இந்த ஆறு பிழைகளையும் ஆரம்பத்திலேயே திருத்தி விடுவார்கள்.



ஆக படிப்பதிலும் சரியான முறை ஒன்று உண்டு; அதைச் செய்க என்கிறது பாணிணி சிக்ஷா!

எழுதியவர் : (23-Mar-19, 9:15 pm)
பார்வை : 77

சிறந்த கட்டுரைகள்

மேலே