படுக்கை அறையை ரொமான்டிக்காக அலங்கரிக்க சில டிப்ஸ்

வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும், அவை எவ்வளவு தான் அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தாலும் படுக்கையறைக்கு என்று ஒரு தனி முக்கியத்துவமும், குணமும் உண்டு. அசதியான தருணங்களில் ஓய்வெடுக்கும் போது, நம்மை நமக்கே புதுப்பித்துத் தரும் படுக்கையறைக்கு, வீட்டின் காதல் நிறைந்த பகுதி என்ற மற்றொரு முகமும் உண்டு. இரவில் தூங்கவும், பகல் பொழுதுகளில் அவ்வப்போது ஓய்வெடுக்கவும் படுக்கையறையை தான் பயன்படுத்துவோம். இப்படி காதலும், ஓய்வும், புத்துணர்ச்சியும் கலந்த படுக்கையறை பொழுதுகளை மேலும் மேம்படுத்த என்ன செய்வது? பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். கற்பனை வளத்துடன், அழகுணர்ச்சியையும் கொஞ்சம் இணைத்து வெளிப்படுத்தினாலே போதும். மின்னும் காதலுக்கும், அழகியலுக்கும், பரிபூரண தொல்லையில்லாத ஓய்வுக்கும் இலக்கணமாக படுக்கையறை உருமாறிவிடும். இப்போது அந்த படுக்கையறையை மிகுந்த காதல் நிறைந்த பகுதியாக மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்...

தனிநபர் புகலிடம்

உங்கள் படுக்கையறையை உங்களுக்கேற்ற பிரத்யேகமான, சொகுசான புகலிடமாக வடிவமைத்தால், அது களைப்புகளை நீக்கி, காதல் நிறைந்த, சொகுசான, அரவணைப்பு நிறைந்த பாதுகாப்பான இடமாக மாற்றும்.

பெரிய, தடிமனான மெத்தை

படுக்கையறையின் முக்கிய பயன்பாடான மெத்தை மிகப்பெரிய கிங் சைஸ் மெத்தையாக, 18 இன்ச் தடிமன் உள்ளதாக இருந்தால், அதில் தூங்கும் போது பிரச்சனைகள் எல்லாவற்றையும் தொலைத்து நிம்மதியை உணரலாம். மிகவும் தடிமனான சொகுசான மெத்தைகளில் படுக்கும் போது ஒருவித சுகம் இருப்பது உண்மை தான்.

மிருதுவான, சொகுசான தலையணைகள

கலைநுணுக்கம் மிகுந்த, அழகான, தனித்துவமிக்க தலையணை வடிவங்களை பயன்படுத்துவது படுக்கையறையை காதல் நிறைந்ததாக ஆக்கும். உள்ளே இருக்கும் மிருதுவான பஞ்சும், துணியும் மென்மையான காதல் உணர்வை அதிகரிக்கிறது.

சொகுசான தனியிடம்

படுக்கையறையின் ஒரு ஓரத்தில் அழகான அறைகலன்களால் அலங்கரிக்கலாம்.

ஜன்னல் மாடம்

ஜன்னல் மாடம் அல்லது ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கல் மேடையை அமரும் வண்ணம் பெரிதாக்கி புத்தகங்கள் படிக்கவோ, ஓய்வெடுக்கவோ பயன்படுத்தலாம்.

தனிப்பட்ட சிறிய உணவு மேடை

வட்ட வடிவிலான, 30 இன்ச் விட்டமுள்ள சிற்றுண்டி மேஜையுடன் இரண்டு நாற்காலிகளையும் ஒரு ஓரத்தில் அமர்த்துவது தனிப்பட்ட விஷயங்களை பகிரவும், வீட்டின் மற்ற இடங்களில் இருந்து சற்று ஒதுங்கியிருந்து உணவையோ, காபியையோ துணையுடன் ரசித்துப் பருகவும் உதவும்.

பொலிவான அறையாக்க...

பீங்கான் மற்றும் பளிங்கால் அழகூட்டப்பட்ட அலங்கார மேஜைகள் காதல் உணர்வை ஊட்டும் அதே சமயத்தில், மெத்தையிலேயே அமர்ந்து சிற்றுண்டி உண்ண உதவும் அழகிய சிறிய மேஜைகள், மெல்லிய வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகள், வாசனை எண்ணெய்கள் ஆகியவை அறைக்கு மேலும் பொழிவூட்டுகின்றன.
புதிய முறை

வித்தியாசமான வண்ண விளக்குகள்

மெல்லிய விளக்குகள், மெழுகுவர்த்திகள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் நிறங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக, அழகூட்டுவதாக இருந்தால், படுக்கையறையில் நிலவும் காதல் உணர்வு இன்னும் பலப்படும். மேலும் வெளிச்சம் உள்ளே புகாதவாறு போடப்படும் திரைச்சீலைகள் நரம்புகளுக்குப் புத்துணர்வூட்டி பரிபூரண ஓய்வூட்டுகின்றன,

கலைக் காட்சியகம்

அழகான நினைவுகளைத் தூண்டும் வண்ணம் புகைப்படங்களை சுற்றில் மாட்டுவது காதல் நினைவுகளையும், ஆசைகளையும் தூண்டி, கனவுலகத்திற்கே அழைத்துச் செல்லும்.

புகலிடத்தின் நிறங்கள்

க்ரிம்சன், அடர்ந்த பச்சை நிறம், நீலம், பிங்க், மேக நீலம், கடல் பச்சை ஆகிய காதல் நிறைந்த நிறங்களை சுவற்றிற்குப் பூசுவது ஓய்வையும், புத்துணர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

படிப்பகம்

பழங்கால அல்லது நவீன படிப்பு மேஜை ஒன்றை வசதியான நாற்காலியுடன் ஒரு ஓரத்தில் அமர்த்துவது சிறிய கடிதங்களையும், காதல் கவிதைகளையும் எழுத உதவும்.

சிறிய அருந்தகம்

படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் சிறிய குளிர்சாதனப் பெட்டியில், உங்களுக்குப் பிடித்த வைத்துக் கொள்வது, உங்கள் தனிப்பட்ட நேரங்களை வெளியுலகத் தொந்தரவின்றி அமைக்கும்.

பொழுதுபோக்கு

படுக்கை அறையில் தொலைக்காட்சியை வைத்துக் கொள்வது பிடித்த திரைப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் பார்க்க உதவும்.

சரியான முறையில் விளக்குகளை அமையுங்கள்

படுக்கையறையை மின்னும் சிறிய தொங்கு அலங்கார விளக்குகள் மற்றும் விளக்குகளுடன் கூடிய செடிகளால் அலங்கரிப்பது, பாலைவனச் சோலையில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும்,

கண்ணாடி

வழக்கத்திற்கு மாறான இடங்களில் கண்ணாடிகளைப் பொருத்துங்கள். படுக்கைக்கு நேராகவோ, மேஜைக்கு அருகிலோ விளக்கொளியை பிரகாசிக்கும் வண்ணம் அமையுங்கள்.

அலமாரிகள்

படுக்கை அறையில் நவீனமயமான அலமாரிகளை, செல்போன்கள் மற்றும் எழுது சாமான்களை ஒழுங்காக அடுக்கும் வண்ணம் வாங்கி பொருத்தலாம்.

தேவையற்றவற்றை ஒதுக்கிவிடுங்கள்

கைக்கெட்டும் தொலைவில் தேவையான பொருட்கள் இருக்கும் வண்ணம் சீரான முறையில் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறை அமைந்தால் மட்டுமே ஓய்வும், நிம்மதியும் பரிபூரணமாகக் கிடைக்கும். ஆகவே படுக்கை அறையில் உள்ள தேவையற்றவற்றை நீக்கிவிடுங்கள்





By Super

எழுதியவர் : (24-Mar-19, 5:22 pm)
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே