பூக்கள் பழங்கள் பால் சொம்பு முதலிரவில் இதெல்லாம் எதுக்கு தெரியுமா

திருமணமான முதல்நாளில் தம்பதியர் முதல் முதலாக சந்திக்கும் முதலிரவு நாளில் சம்பிரதாயமான சில சடங்குகள் நடைபெறும். பால் சொம்பை கொடுத்து அறைக்குள் தள்ளி விடுவார்கள் தோழியர். பாலுடன், பழம், இனிப்புகள் வைத்திருப்பார்கள். இது சம்பிரதாயமான ஒன்றாகவே இருக்கிறது. ஆயிரம் இரவுகள் வந்தாலும் முதலிரவு மறக்கமுடியாத ஒன்றாகும். திருமண தினத்தின் முதல் இரவில் தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கும் நிலையில் மணப்பெண் கையில் பால் கொடுத்து முதலிரவு அறைக்குள் அனுப்பி வைப்பது காலம் காலமாக தொடர்கிறது. அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறையில் தங்களின் முதல் தாம்பத்யத்தை ஆணும் பெண்ணும் தொடங்குகின்றனர். இந்த சம்பிரதாயம் பற்றி காதல் திருமணம் செய்து கொண்ட பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. முதலிரவு பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன.

தம்பதியரின் சந்திப்பு

படுக்கை அறைக்குள் முதன் முதலாக நுழையும் முன்பாக மத்தாப்பு பூ பூக்கும். என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். முதலிரவு பற்றிய பல ஆய்வுகளில் பெற்றோர் பார்த்து செய்து வைக்கு தம்பதிகள் புரிந்துகொள்வதற்கு நேரம் தேவைபடுகிறது. இதானல் உறவில் ஈடுபடுவது தள்ளி போகிறது என்று தெரியவந்துள்ளது.

முதல் நாளில் மன அழுத்தம்

திருமணதிற்கு முந்தயை நாள் மணமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு சோர்வில் இருப்பார். எனவே முதலிரவு அன்று சீக்கிரமே தூங்குவார்களாம். மேலும் திருமணத்தின் போது ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அதனால் அவர்கள் முதலிரவில் ஈடுபடுவதை தவிர்கிறார்கள். முதலிரவின் போது ஒரு சில ஆண்கள் தங்களது மனைவியை காட்டாயபடுத்தி உறவில் ஈடுபடுகிறார்கள். ஒரு சிலர் மூன்று அல்லது நான்கவது நாளில் உறவு வைத்து கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

கட்டில் சத்தம் கேட்கும்

இந்திய திருமணங்களில் காலங்காலமாக பெண்களின் கழுத்தில் ஆண்கள் தாலி கட்டுவது தொடருகிறதோ, அதே போல நல்ல நேரம் முகூர்த்தம் பார்த்து படுக்கை அறைக்குள் சாந்தி முகூர்த்தத்திற்கு அனுப்பி வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கையில் பால் சொம்புடன் மணமகள் படுக்கை அறைக்கு வருவதும், மணமகளை எதிர்பார்த்து மணமகன் காத்திருப்பதும் காலம் காலமாக தொடர்கிறது.

மணமகள் கையில் பால்

பாலில் உள்ள சுவை, மணம், வெண்மை, போல இருவரது இல்வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், விட்டுக்கொடுத்தல் போன்றவை இன்று முதல் தொடங்கும் என்ற அர்த்தத்தில்தான் பால் கொடுத்து அனுப்பப்படுகிறதாம். பால் என்பதை அதிர்ஷ்டத்தின் பொருளாக நம் முன்னோர்கள் கருதி வந்தனர். பால் அருந்தி இல்வாழ்க்கையை தொடங்குவதால் தம்பதிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆளுக்கு பாதி பால்

கணவன் பாதி பாலை குடித்துவிட்டு தரும் மீதி பாலை மனைவி வாங்கிக் கொண்டு இனி உங்கள் பாதையே என் பாதை எந்த நிலையிலும் பாலின் உள்ள வெண்மை பிரியாதது போல் இறுதி வரை உன்னுடன் நான் இருப்பேன் என்ற அர்த்தத்தில் மனைவி அந்த மீதி பாலை குடித்து உறவை தொடங்குகின்றனர். பாலில் பாதாம், பிஸ்தா, முந்திரி கலந்து தம்பதிகளுக்கு உற்சாகத்தை தரும் ஒரு வித சத்து பானமாகவே அதை கொடுக்கின்றனர்.

ரோஜாவும் மல்லிகையும்

முதலிரவு அறை நன்றாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். படுக்கை மீது பூக்களை தூவியிருப்பார்கள். படுக்கை அறையில் மல்லிகை, ரோஜா கொண்டு அலங்கரித்திருப்பார்கள். கூடுதலாக நறுமணம் வீசும் பெர்ப்யூம்களை தெளித்திருப்பார்கள். இது புதுமணத்தம்பதியரின் உற்சாகத்தை அதிகரிக்கும் காதல் உணர்வுகளை தூண்டிவிடும் என்பதனால்தானாம்.

உற்சாகம் தரும் பேச்சுக்கள்

படுக்கை அறைக்குள் நுழையும் முன்பாக கேலியும், கிண்டலுமாக பேசி மணமகளையும், மணமகனையும் தோழிகள் கிண்டலடிப்பார்கள். அதுவும் அத்தை மகள், மாமன் மகன் முறையுள்ளவர்கள் சின்னச் சின்ன பரிசுகளை கொடுத்து மகிழ்விப்பார்கள். அது மணமகன் அறைக்குள் நுழையும் முன்பாக ஏற்படும் நடுக்கத்தை தடுப்பதற்காகவே இந்த கேலிப்பேச்சுகளை பேசி அனுப்பிவைப்பார்கள்.

வெட்கத்தோடு வரும் மணமகள்

அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறையில் மணமகன் காத்திருக்க... பட்டுப்புடவை கட்டி, அலங்கரித்து தலை நிறைய பூ வைத்து படுக்கை அறையில் வெட்கம் கலந்த புன்னகையோடு கையில் பால் சொம்புடன் மணப்பெண் நுழைவது ஒரு சம்பிரதாயமாக இருக்கிறது. அந்த நேரத்தில் முதல் முதலாக தன்னையே ஒப்படைக்கும் மணமகளுக்கு மறக்க முடியாத பரிசுகளை தருகிறான் மணமகன்.


----------------------------------------------
மயூரா அகிலன்

எழுதியவர் : (24-Mar-19, 5:37 pm)
பார்வை : 102

மேலே