புலம்பும் சிலம்பு
மாமதுரையில்
மன்னர் அவையில்
சிலம்பு
உடைக்கப்பட்டபோது
சிதறியது
முத்துக்களா? வாழ்க்கையா?
எரிந்தது
மதுரையா? வாழ்க்கையா?
புகாரில் பிறந்தவன்மீது
புகார் சொன்னவன்
பொற்கொல்லனா?
உயிர்க் கொல்லனா?
ஆராயாமல்
தீர்ப்புச் சொன்னான்
அரசன்
ஆராய்ந்து
தீர்ப்புச் சொன்னான்
எமன்.