மனமே மனமே

குரூரம் நிறைந்தது மனித மனம்
குறுகிய நிமிடங்களில் பெரும்
குற்றம் செய்ய துணியும்.

அறிவில் சிறந்ததாய் - கூடும்
அவையில் பேசித்திரியும்
அத்தனையும் அப்பட்ட பொய்யாகும்

இடர் வரும் காலத்தின் போது
இரு கரத்தால் காப்பது போன்று
இளகிய அன்பு காட்டும் எல்லாம் நடிப்பேயாகும்

படிப்பால் பக்குவம் அடைந்து
படி படியாய் தெளிந்தே சிறப்பின்
பாமரன் போலே மாறி பம்மாத்து வேலை செய்யும்

கிடைக்கின்ற காலத்தை எல்லாம்
கிடக்கட்டும் என்றே எண்ணி
கிழப்பருவம் அடைந்ததும் கீழான வார்த்தையால் வையும்

அறிவின் ஆற்றலோடு - மாறும்
மனந்தனை ஆட்சி செய்தால்
மகத்துவம் பெற்றே நாமே மண்ணுலகில் வாழ்ந்திடலாமே.
- - - - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Mar-19, 10:52 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : maname maname
பார்வை : 804

மேலே