இயற்கையோடு கலந்த பொழுதில்

#இயற்கையோடு கலந்த பொழுதில்…!

நீலக் கடல் இருக்க
நீரேந்தும் காற்றிருக்க
பாய்ந்து வரும் அலையிருக்க
அலை வருடும் நேசமிருக்க
விளையாடிக் களிதிருப்பேன்
அலையோடும் கடலோடும்..!

அளந்தரியா வான் இருக்க
அதில் பொழியும் மழை இருக்க
வானிலும் மீன் இருக்க
குளிர்விக்க நிலவிருக்க
குதூகலமாய் நானிருப்பேன்
விண்ணோடும் முகிலோடும்..!

பாரிஜாதம் பூவிருக்க
மல்லி முல்லையிருக்க
தேன் வழி பூக்களொடு
தேவாரம் வண்டிசைக்க
வாசந்தொடும் சுவாசத்திலே
நான் மயங்கி சாய்ந்திருப்பேன்..!

கூவும் குயிலிருக்க
கொஞ்சும் கிளியிருக்க
மூங்கில் காடி ருக்க
மோதி காற்று இசைதிருக்க
மோகனமாய் வரும் பாட்டில்
நான் தலை சாய்ந்திருப்பேன்..!

மண் மறந்த வேளையிலே
கண் மயங்கி நான் கிடந்தேன்
விண்ணவரும் அருகினிலே
வந்ததுபோல் இருந்ததுவே
இந்நிலையே போதுமென்பேன்
குறையேது எனக்கிறைவா..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (25-Mar-19, 10:11 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 114

மேலே