திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சி
===========================================ருத்ரா
உன் கண்களின் கருங்கடலில்
தினம் தினம்
வழுக்கி விழும் சூரியன்கள்
நீ விழிக்கும் போது தான்
மலையிலோ
கடலிலோ
முகம் காட்டும்.
ஆதலால் என்றைக்கும்
நீ கண்விழிக்க மறக்காதே.
இப்பூவுலகு இருட்டில் வீழ்ந்து
தொலைந்து போக விட்டு விடாதே.
இதுவே நான் உனக்கு பாடும்
திருப்பள்ளியெழுச்சி.
=================================================