அவள் அழுகின்றாள்

அவள் அழுகின்றாள் . . .

அந்த நள்ளிரவின் நிசப்தம் அவள் அழுகுரலோடு
உப்பு நீரில் கரைந்து கரித்தது…..

காலக் கரையான்களும் முயன்று தோற்ற
மட்க இயலா நினைவுகள்
அவள் இரவுகளின் சூல் தங்கி நின்றது….


இரவின் மசி தோய்ந்த அந்நினைவுகள்
விடியலின் வெளிச்ச ரேகையை
உள் வாங்க மறுத்தது……


வறண்டொழுகும் சிறு விழித்துளியும்
தக்கவைத்துக் கொண்டிருந்தது
அந்நினைவுகளின் வேர்களை பசுமையாய்….


அவளை மடி சாய்த்த தலையனண மட்டும்
ஆற்றாது பொதுமிக் கொண்டிருந்தது
இராப்பகலாய்……


முக்காடணிந்த அவள் பகல்கள்
இரவின் இருளை இரவல்
வாங்கிக் கொண்டிருக்க……


அவளது இரவுகளின் தட்பத்தில்
அவள் கண்ணீர் மட்டும்
கொதித்துக் கொண்டே இன்றளவும்….

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (26-Mar-19, 8:50 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 138

மேலே