தலைக்குள் ஏறாதே
எட்டா வானம் கூட
தொடும் தூரம்
பக்க வீதி தான்...
உன் வட்ட முகம்
பார்க்க வந்தால்...
ஊசிப் பார்வை வீசி விட்டு
என் வாசல் கடக்காதே...
மனசு ஊஞ்சல் கட்டி
ஊர்வலம் போகும்
வானவீதி தான்...
காலனும் காலம்
வரும்வரை காத்திருப்பான்...
ஒவ்வொரு நொடியும்
கடைசி மூச்சு தான்
உன்னை காண
நாடி வரும்வரை...
என்றும் அன்புடன்,
மதன்