தன்னில் நிறைதல்

வேற்றுமை கண்டார் வெதும்பி நின்றார் வேற்றுமை எல்லாம் வெறுமையில் முடியுமே என்று அறிந்தும் வேற்றுமைகளில் வேரூன்றி வேதனை கொள்ளும் மனங்களால் ஒற்றுமை காணாது போகுமே.

சாதகம் செய் மனமே, எழுதப்பட்ட ஜாதகமெல்லாம் பொய் என்றே சாதகம் செய் மனமே,
பாதகம் செய்யாத குணம் வளர சாதகம் செய் மனமே,
ஆதி மூலமான அன்பில் கலந்து அன்பாய் வாழ சாதகம் செய் மனமே,

தன் மனதின் விருப்பறிந்தால் தன்னை அறிதல் எளிதாகுமே,
தன்னை அறிதலால் தன்னை திருத்தலாகுமே,
தன்னை திருத்தலால் தன்னில் நிறையுமே,
தன்னில் நிறைதலால் பேராசை, பெருங்கோபம், பொறாமை என்ற எவ்வழுக்கும் தன்னில் தோன்றாமலே வாழுதலாகுமே,

வாழ்வதெல்லாம் வாழ்வா?
வாழ்ந்த வாழ்வை நினைந்து மனச்சாட்சியைத் தட்டிக் கேள்,
அது சொல்லும் தீர்ப்பே, ஆதிமூலத்தின் தீர்ப்பாகுமே.
தீர்ப்பின் தாக்கத்தை ஏற்றுக் கொள்,
அது உன்னை திருத்தி அமைக்குமே.

கடமையை செய்வதில் கருத்திருந்தால் கவலையேதுமில்லை,
அதிலிருந்து பிறந்திடும் தன்னம்பிமையே
தன்னில் நிறைதல் தொடர்ந்து நிலைப்பதற்கு துணையாகுமே.
ஐம்புலன்கள் வழி தடுமாறாதிரு.
தன்னில் நிறைந்து இந்த அகிலத்தையே நிறைவுறச் செய்வாயாகவே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Mar-19, 11:30 pm)
பார்வை : 863

மேலே