இனைந்த கைகள்

இனைந்த கைகள் 🤝

போதும் உன் கோபம்
போதும் உன் பிடிவாதம்
புறப்படு என்னோடு
நம் வீடு செல்வோம் வா தாத்தா

கழிவு என்று என்னை
காரணத்துடன் வீதியில் தூக்கி எறிந்து பின்
காயம் ஆரா மனதுடன்
நான் அங்கு வருவது நல்லதல்ல
உகந்ததும் அல்ல

அந்த சுயநலவாதிகளின்
சங்கதி இனி வேண்டாம்
அந்த மதியிழந்த முண்டங்களை
பற்றி இனி பேச வேண்டாம்
உன் ஆசை பேரன் அழைக்கிறேன்
வா நம் வீட்டுக்கு செல்வோம்

நம், நாம் என்ற எண்ணம் போய்
நான்,எனது என்ற
மனப்பான்மை
ஆன பிறகு
நான் ஒதுங்குவது சாலசிறந்தது.

வயதில் சிறியவன் நான் கேட்கிறேன்
நீர் அடித்து நீர் விலகுமா
ஒரு முறை மண்ணிக்க கூடாதா?

பழமொழிகள் சில சமயம்
பொய்த்து போவது உண்டு
நான் உடைந்த ஏணி
நான் அறுந்த கயிறு
பொத்தல் தோண்டி
பழைய அழுக்கு மூட்டை
தூர எறிய வேண்டிய குப்பை.

யார் சொன்னது தாத்தா
நீ ஒரு சந்தண பேழை
அறிவு களஞ்சியம்
பாதுகாக்க வேண்டிய
பொக்கிஷம்
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

என்ன தான் நான் விலகினாலும்
நீ என் ரத்தம் அல்லவா
அலங்கார வார்த்தை கோர்த்து
எனக்கு அழுகு
பூ மாலை சூடுகிறாய்
ஆயிரம் தான் நீ கூறினாலும்
அந்த உறவு உடைந்த கண்ணாடி
சேர்க்க இயலாது.

இறுதியாக என்ன தான்
உங்கள் முடிவு
நீங்கள் இல்லாத இல்லத்தில் எனக்கு மட்டும் என்ன உரிமை
நானும் கால் போன போக்கில்
மனம் செல்லும் பாதையில்
என் பயணம் செல்லட்டும்

நான் பட்ட மரம்
நீ பூத்து குலுங்கும் செடி
என் பயணம் முடிந்துவிட்டது
உன் பயணம் இனிதே ஆரம்பித்துள்ளது
நீ சிறகு அடித்து வெகு தூரம் பறக்க வேண்டிய பறவை
நான் பல தூரம் பறந்து ஓய்ந்த சிறகொடிந்த பறவை.

உனக்கு என்ன குறைச்சல் தாத்தா
நீ ஒரு ராஜா
மறந்துவிட்டாயா தாத்தா
நம் கிராமத்தை
அந்த நாலு காணி நிலத்தை
வா இருவரும் செல்வோம் அங்கு
அழகாக செய்வோம் உழவு தொழிலை
நீ கட்டளை இடு
நான் உனக்கு
அடி பனிந்து
உழைப்பேன்

மறக்கவில்லை என் செல்லமே
மறணிக்க போகும் வேளையில்
முடியுமா என்ற யோசனையே
சாத்தியமா என்ற மனச்சோர்வே.
உன் வார்த்தை புது தெம்பை தருகிறது
உன் உத்வேகம் என் வயதை பத்து குறைத்தது
மாய உலகில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் கூட்டத்தில்
நீ தமிழனின் ஆதி தொழிலை தேர்வு செய்தது
என் மனம் நிகழ்கிறது
இனி நீயே என் வழிகாட்டி
விவசாயம் செய்வோம்
இந்த உலகை காப்போம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (30-Mar-19, 9:09 am)
சேர்த்தது : balu
பார்வை : 259

மேலே