இலங்கைக்கு விடிவு காலம்

இலங்கைக்கு விடிவு காலம்

பொன் குலேந்திரன் (கனடா)

நான் புவி இயற்பியலில் முனைவர் ( Doctorate in Geo Physics) பட்டம் பெற்று சௌதி அரேபியாவில் உள்ள அரம்கோ (Aramco) நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை செய்தவன். இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம், இலங்கையில்
மன்னார் விரி குடாவில் பெட்ரோல் இருக்கிறதா என்று கண்டு பிடிக்க எனது திறமையைப் பயன் படுத்த பொறுப்பதிகாரியாக பொறுப்பு ஏற்க சம்மதமா என்று கேட்டு எனக்கு கடிதம் அனுப்பி இருந்தது. என் கடந்த கால அனுபவத்தினால் முதலில் நான் அந்த அந்த பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. காரணம் நான் 1983 ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தில் உயர் பதவியில் இருந்தேன். என் பதவி மேல் ஆசை கொண்ட எனது சிங்கள உதவியாளர் 1983இல் நடந்த இனக் கலவரத்தின் போது, தனது இலட்சியத்தை அடையக் கலவரத்தைப் பாவித்து சில சிங்கள ஊழியர்களைக் கொண்டு என்னைத் தாக்கினார். என் உயிர் தப்பியது கடவுள் புண்ணியம். அந்த சம்பவத்தின் பின் இலங்கையில் வேலை செய்ய நான் விரும்பவில்லை.குடும்பத்தோடு இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தேன் அங்கு வேலை செய்தபடி . படித்து முனைவர் பட்டம் பெற்று செளதி அரேபியாவில் உள்ள அரம்கோ நிறுவனத்தில் வேலை செய்தேன் .எனது திறமையை நான் பிறந்த நாடு நான் தமிழன் என்பதால் பாவிக்கத் தவறி விட்டது
இலங்கை அரசிலிருந்து பெட்ரோல் ஆய்வு செய்ய என் அறிவை பயன் படுத்த உயர்ந்த சம்பளம் சலுகைகளோடு எனக்கு . வந்த பதவியை ஏற்க முதலில் சிந்தித்தேன்

என்னோடு படித்து இரசாயன பொறியியலில் பட்டம் பெற்ற என் நண்பன் ராஜரத்தினதுக்கு எனக்கு இலங்கை அரசிலிருந்து வந்த கடிதத்தைக் காட்டினேன். அவர் அதி வாசித்த பின்,
“ என்ன குமார் உன் முடிவு “
”என்னால் எனக்கு இலங்கையில் 1983இல் நடந்ததை மறக்க முடியவில்லை. அந்த 1983 ஆண்டில் நடந்த இனக் கலவரத்தின் பின் இலங்கை அரசின் தமிழருக்கு எதிரான கொள்கையில் அவ்வளவு மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. அதுவும் ஈழப் போரின் முடிவுக்குப் பின் பேசத் தேவை இல்லை”.

நான் இலங்கைக்குப் போய் வேலை செய்ய விரும்பவில்லை என்பதை அறிந்த ராஜ்
“ குமார் , உமக்கு மன்னார் வளை குடாவில் பெட்ரோல் இருக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி நன்கு தெரியும். அந்தப் பகுதி தமிழ் ஈழத்தில் உள்ள வட மாகாணத்துக்குள் அடங்கும். நீர் உமது அறிவை பாவித்து மன்னாரில் பெட்ரோல் கண்டுபிடித்தால் அது எமது வட மாகாணத்தின் பொருளாதாரத்தை செளதி அரேபியாவைப் போல் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் . எமக்கு ஒரு காலத்தில் தமிழ் ஈழம் கிடைத்தால் பின் சொல்லவும் வேண்டுமா”.”
“ ராஜ் இது முன்பு ஒரு காலத்தில் எனக்கும் இருந்த கனவு. இலங்கைக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின் முதன் முதலில் மன்னார் வளை குடாவில் பெட்ரோல் இருக்கிறதா என்று 1957 இல் முதன் முதலில் ஆய்வு நடந்தது .
ராஜ் அந்த பகுதியில் பெட்ரோல் இருக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம்: இலங்கைத் தீவும் தென் இந்தியாவும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. நீர் மட்ட உயர்வினால், அல்லது கடல் கோள்களினால் இராமன் பாலம் தோன்றியது. மன்னார் வளை குடாவில் பவளப் பாறைகள் உள்ளது முத்தும் , பெட்ரோலும் உண்டு. அதோடு நெடுந்தீவு, கச்சைத் தீவு , பேசாலைப் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் பெட்ரோல் இருக்கலாம்”

“ குமார் முன்பு ஏதும் ஆய்வு செய்து ஏதும் கண்டு பிடித்தார்களா”?

“கடல் நில அதிர்வு ( Marine Sesimic Data) தகவல்கள் படி
மன்னார் வளைகுடாவின் இராமர் பாலம் இருக்கும்
இலங்கையின் மேற்கு கரை ஓரத்தில் .
பெட்ரோலியம் இருக்கும் சாத்தியத்தை அறிய
2007 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா அரசாங்கம்
ஆய்வு உரிமையை , 2008 ல் கெய்ர்ன் லங்கா பிரைவேட் லிமிடெட்டுக்கு கொடுத்தது
கெய்ர்ன் மூன்று ஆய்வுக் கிணறுகளைத் தோண்டினார்கள் ஆகஸ்ட்-டிசம்பர் 2011 மட்டில் முதல் இரண்டு கிணறுகளிலிருந்து இயற்கை வாயு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பெட்ரோல் கண்டு பிடிக்கப் படவில்லை”.


“அப்போ குமார் நீர் அவர்களின் அழைப்பை ஏற்றுப் போய் கண்டுபிடியும்”.
“ராஜ் இதை பற்றி நான் சிந்தித்து முடிவு எடுக்கிறேன்”.

****

அடுத்த நாள் எப்ரல் முலாம் திகதி,. அன்றைய
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வந்த முதல் பக்க செய்தி ஒன்றைக் என் மகன் எனக்கு கொண்டு வந்து காட்டி . “அப்பா இந்த நியூசை வாசியுங்கள் இலங்கைக்கு விடிவு காலம் பிறந்து விட்டதாம்”
நான் பேப்பரை என் மகனிடம் இருந்து வாங்கி வாசித்தேன் அதில் “ இலங்கயின் மன்னர் வளை குடா பகுதியில் உள்ள பேசாலையில் பெட்ரோல் கண்டுபிடிக்கப் பட்டது . இனி இலங்கையின் பொருளாதாரத்துக்கு விடிவுகாலம் என்று விபரம் எழுதி இருந்தது.
“நான் எதிர்பார்த்தது நடந்து விட்டது மோகன் “என்றேன் என் மகனிடம்.
அவன் சிரித்தான்.
“ஏன் மகன் சிரிக்கிறாய் “?
இல்லை அப்பா மிகுதி செய்திக்கு மேலும் ஆறாம் பக்கத்தைப் பார்க்கவும் என்று எழுதி இருக்கு. ஆறாம் பக்கத்தில் இருப்பதை வாசித்தீர்களா அப்பா’?
“ இல்லை”.
“ வாசியுங்கள் அப்போ செய்தியின் முடிவு உங்களுக்குத் தெரியும்”:
நான் ஆறாம் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன்

அதில் முதல் பக்க செய்தியை நீர் நம்பினால், நீர் ஒரு ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள் என்று எழுதி இருந்தது”

எனக்கு என்னை அறியாமலே சிரிப்பு வந்தது.

(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (31-Mar-19, 10:35 pm)
பார்வை : 97

மேலே