பார்வை ஒன்றை வீசுவாயா

அன்பே
இமைகள் இமைக்கும் நொடியினிலே
இதயத்தைத் திருடிச் சென்றவளே
துடித்திருந்த என் இதயத்தை
எங்கே சிறை வைத்துள்ளாய்

இதயத்தை திருடிய நாள்முதலாய்
அந்தி பொழுதிலே தூக்கம் போட்டு
ஆறேழு வருடமாச்சி
அடி அம்மாடி
அந்நாந்து பார்த்தாலே
அழியாத உந்தன் காட்சி
ஆழ்கடலில் தொலைத்த முத்தாக
உன்னையே தேடுகிறேன்
என்னை இழந்தும் உன்னைகாண வாடுகிறேன்
வாடி வதங்கும் என்னோடும்
வாசல் திறந்த என் கண்ணோடும்
வந்து சேர்ந்து விடடி
என் கண்மணியே

உன்னை தஞ்சம் கேட்கும்
என் நெஞ்சோரம் நீ வந்தால்
"முகிலின் முந்தானை விரித்து
முழுநிலவே உன்னை மூடி மறைப்பேன்
முடியாது என்று நீ சொன்னால்
முட்களின் வேளியாக தாடி வளர்ப்பேன்"

இதயத்தை அடையும் முன்னே
இளமையில் தாடி வளர்க்கும்
என் கொடுமையை அறிந்து
உண்மையை புரிந்து
மனச்சிறையை விடுவிக்க மஞ்சள் முகமே
பார்வை ஒன்றை வீசுவாயா...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (3-Apr-19, 7:42 pm)
பார்வை : 722

மேலே