தேடுவமோ பாரதமாம் திரவியத்தை
வெண்பா..
கோளனாய்த் தானே குறைசொல் லிலக்கியங்கள்
நாளுமே செய்கிறோம்! நல்லதாய் –தோளெடுத்(து)
என்செய்வோம் நன்மை? எவர்திருந்த? நாம்மாற
முன்செய்வோம் நல்ல முனைந்து!
====++++=====
கலிவிருத்தம்
விந்தியமே எல்லையென வேண்டி வகுத்திடினும்
இந்தியனே தமிழன் இல்லையென யார்சொல்வார்?
சிந்தையால் பாரதத்தின் சிறப்பெண்ணிப் பாடுபட
வந்திடுவோர் மொழிகடந்த இந்தியரே இல்லையோ?
====++++=====
தரவுக் கொச்சகக் கலிப்பா..
ஊடாடும் ஆசைகளால் உள்ளங்கள் குட்டையென
ஓடாத நதியாச்சோ? ஊதியிதைப் பெரிதாக்கும்
ஊடகமாம் இரசாயன உரங்களினால் கெட்டோமோ?
தேடுவமோ பாரதமாம் திரவியத்தை இனியேனும்!
=========++++++++========
நாட்டின் மேலுள்ள காதல் கவிதையெனக் கொள்ளவும்.