கைவிடற்க

" கைவிடற்க "
******************************

அலைகங்கைத் துளிதெளித்தே புனிதம் கொடு
தலை அரவம் இறக்கிவிட்டு விடமிறக்கு
ஒளி மதியால் என்மதியை ஒளிரவிடு
களி கூர்ந்து அருள்நோக்கு கைவிடற்க !

கற்றிடப் பலபொருளை காட்டியே வைத்து
கற்றிடும் அறிவுதந்து தூண்டியே விட்டு
கற்றதன் கர்வமதைக் கலக்கியே விட்டு
நிற்கின்ற தெளிவளி த்தவனே கைவிடற்க !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Apr-19, 7:23 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 113

மேலே