கனிவான காதல் உன் மேல்

பள பளப்பு குறைந்தாலும்
பருமனாய் இருந்தாலும்
பார்த்தவுடன் பிடித்ததடி
பஞ்சவர்ண அஞ்சுகமே.

ஏழையாய் இருந்தாலும்
ஏவல் தொழில் புரிந்தாலும்
எந்நிலை சுழலிலும்
உன்னை பிரிய மாட்டேண்டி.

அழகான இதயம் செய்து
அளவில்லா அன்பை வார்த்து
கனிவான மொழியால் அழைக்கும்
கனிமொழியே உன் மேல் காதல்.

மனம் என்ற மாயக் குகைக்குள்
மகத்தான விளக்காய் வந்தாய்
மறுப் பேச்சுக்கு இடமேயின்றி
மானசீகமாய் ஏற்றுக் கொண்டேன்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Apr-19, 6:13 pm)
பார்வை : 449

மேலே