காதல்

இருள் சூழ்ந்த வானத்தில்
அங்கும் இங்கும் மின்மினுக்கும்
தாரகைகள் மின்மினிக்கள்போல்
ஒளி தேடிய அந்த வானிற்கு
தன்னொளி பரப்ப வந்த
திங்களைப்போல், இருண்ட
என் இதயத்திற்கு வந்தாளே
அவள் அழகு சந்திரனாய்
இப்போது அறிந்தேன் அவள்
பெயரும் இந்துவாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Apr-19, 8:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 258

மேலே