வெள்ளை ஆட்டுக்குட்டியே

மேய்ப்பவன் இல்லாமல்
ஆட்டு மந்தை போய்க்கொண்டிருக்கிறது
தயவுசெய்து ஆடுகளே
ஆளுக்கொரு பக்கமாய்
தொலைந்து போய்விடுங்களேன்
அதிலும் மந்தையை தவறவிட்டு
பின்னால் ஓடி வரும்
அழகான வெள்ளை ஆட்டுக்குட்டியே!!
எதற்காக இப்படி துள்ளி குதித்து ஓடுகிறாய்?
நீயாவது தொலைந்து போய் விடேன்...

எழுதியவர் : சிவா. அமுதன் (6-Apr-19, 10:30 am)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 59

மேலே