உனக்காக என்றும் உன் உயிர் தோழன் 555

என் தோழியே...


உன்னை நான் நேரில் பார்க்கும்

ஒவ்வொரு முறையும்...


பசியில் அழும் மழலை

தாயை கண்டவுடன்...


உற்சாகத்தில்
துள்ளி
குதிப்பது போல்...


நானும் துள்ளி

குதிக்கிறேனடி என் தோழி...


உன்னுடன் நான் இருக்கும்

ஒவ்விரு வினாடியும்...


எனக்குள் இருக்கும்

சோகம் எல்லாம்...


பனித்துளிபோல் மறைந்துவிடுகிறது

உன்னை கண்டாலே...


உன் தழுதழு குரலை

என்றாவது நான் கேட்டால்...


என் இதயம்

நின்றுபோகுதடி...


என் தோழியே உனக்கென யாரும்

இல்லையென்று நினைத்துவிடாதே...


மண்ணில் நான்

மரிக்கும்வரை...


உனக்காக ஒரு ஜீவன்

உண்டு மண்ணில்...


என் தோழியே
என்றும்
கலங்கிவிடாதே...


என் உள்ளம் தாங்காது

என்றும் உன் உயிர்தோழன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Apr-19, 7:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1733

மேலே