நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க படுபனை யன்னர் – நாலடியார் 96

இன்னிசை வெண்பா

நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை. 96

- ஈகை, நாலடியார்

பொருளுரை:

பலரும் தம்மை விரும்பி அணுகும்படி வள்ளன்மையுடன் வாழ்பவர்கள் ஊர் நடுவில் மேடையினால் சூழ்ந்து கொள்ளுதலைப் பொருந்திய காய்த்தலையுடைய பெண்பனையை ஒப்பர்; தமது குடி செல்வமிக்க காலத்தும் பிறர்க்கு வழங்கியுண்ணாத மாக்கள் சுடுகாட்டுள் நிற்கும் காய்த்தலில்லாத ஆண்பனையே யாவர்.

கருத்து: பிறர்க்கு வழங்கிப் பலர் நச்ச வாழ்தல் வேண்டும்.

விளக்கம்: படுதல் - இங்குக் காய்க்குந் தன்மையுடையதாதல்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-19, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே