சல்லு மானைக் காணோம்

ஏன்டப்பா முருகையா, அந்த டிவி பொட்டில "சல்லு மானைக் காணோம், சல்லு மானக் காணோம்" னு சொல்லறங்களே அதென்ன மானுடா? கஸ்தூரி மானுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். கலைமானும் புள்ளிமானும் தெரியும்.
இந்த சல்லு மானு.....?
@@@@
பாட்டி, சல்மான் கான்னு ஒரு இந்தி நடிகர். அவுரு நிகழ்ச்சிக்கு வர்றன்னு உறுதி குடுத்தாராம். அவரால வரமுடியலயாம். அதத்தான் "சல்மானைக் காணோம்"ன்னு சில ரசிகர்கள் ஆதங்கப்பட்டங்களாம்.
@@@@@
சல்லுமானு இந்தி நடிகரா? நா எதோ மானுல ஒரு வகைனு நெனச்சுகிட்டன்டா முருகையா.

எழுதியவர் : மலர் (11-Apr-19, 4:39 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 31
மேலே