நல்லவன் என்பவன்

உன்னைப் போல் ஒருவன்
உன் மனதை ஆள்பவன்
தன்னில் நீயாக உனக்கென
உள்ளான் உயிர்த்தோழன்

உன் நெஞ்சத்தில் நிறைவுடன்
சுவாசமே அவனாக நேசிக்க
நீ அவனாலே வாழ்ந்திடுவாய்
நண்பனின் தியாகம் நமக்காக
அவனில் காண்கின்றோம்
நாம் செய்த நற்பயன்கள்
தெய்வங்கள் ஆற்றிட பின் நிற்கும்
நம் தேவை நண்பனால் ஆகிவிடும்
தயங்காது தரும் குணமும் மனமும்
நாம் பெற்ற நண்பனிடம்
நல்லவன் என்பவன் நல்ல நண்பன்
தீங்கில்லா தூய்மையும் நேர்மையும்
நட்பாகும் நண்பனால் ,,
நண்பனே உலகில் முதல் தெய்வம்
நண்பன் உள்ளவன் எல்லாமும் கொள்வான்
எங்கும், எதிலும், எப்பவும், நட்பே சிறந்தது
நட்புக்கு மூலதனம் அக்கறையே
அக்கறை என்பது அன்பின் அடித்தளம்

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Apr-19, 1:22 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : nallavan enbavan
பார்வை : 587

மேலே