கமரா துமாரா - உரையாடல் குறுங்கதை

வாடா கன்னியப்பா. என்ன பொட்டலத்தோட வர்ற?
@@@@
உங்களுக்குத் தாம் பாட்டிம்மா. காவேரிக்குத் தலைப் பிரசவத்திலேயே ரட்டைக் கொழந்தைங்க பொறந்திருக்கு - ஆண் கொழந்தையும் பெண் கொழந்தையும். நீங்கதான் பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கிறதில சிறப்பு நிபுணராச்சே. 'ரா'வில முடியற பேருங்களா எங் பிள்ளைங்களுக்கு வச்சிடுங்க.

@@@@@
நம்ம ஊருள்ள பத்துப் பதினஞ்சு வயசுக்குள்ள இருக்கற புள்ளைங்களுக்கெல்லாம் நான்தான்டா பேரு வச்சவ. 'ரா'வில முடியற பேரு கேட்டயா?
@@@@@
ஆமாங்க பாட்டிம்மா.
@@@@@
'சித்ரா' , 'மித்ரா', 'நேத்ரா' எல்லாம் வச்சாச்சு. நாந்தான் ஒரு நாளைக்கு பதினஞ்சு இந்தித் தொடர் பாக்கறவளாச்சே. இரு. கொஞ்சம் நாபகப்படுத்திப் பாக்கறேன். ஆம்... இம்... நாபகம் வந்திருச்சு. இந்தித் தொடர்ல பேசற போது அடிக்கடி 'கமாரா' (ஹமாரா), 'துமாரா'ன்னு அடிக்கடி சொல்லறாங்க. பொண்ணுக்கு 'கமரா'-ன்னு வச்சிடு. பையனுக்குத் 'துமாரா'-ன்னு வச்சிடு.
@@@@
ரொம்ப நன்றிங்க பாட்டிம்மா. 'ஹமாரா', 'துமாரா' ஆஹா...ரொம்ப சுவீட்டு நேமுங்க பாட்டிம்மா.

எழுதியவர் : மலர் (12-Apr-19, 4:55 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 67

மேலே