அந்திவேளை

குடதிசை வந்திறங்கினான் கதிரோன்
அந்திசாய சிவந்தது வானமும் செவேலென்று
சந்தனத்தோப்புக்குள்ளே கமுகும் சேர்ந்து
வானோங்க வாசம் பரப்ப முன்னிரவு தென்றல்
வந்து தோட்டத்தில் அலர்ந்த அந்தி மலர் வாசமெல்லாம்
தன்னுள் ஏற்றி மெல்ல வந்து என்னைத்தொட்டதே
என்னைத்தொட்ட தென்றல் மெல்ல சென்று
என்னவளையும் தொட்டதோ தெரியாது
நான் சற்றும் எதிப்பாராமலே இதோ
என்னை நோக்கி வருகின்றாள் இவ்வேளையில்
நிலவும் கீழ்வானில் வந்துத்தித்தது
தடாகத்தில் குமுதமெல்லாம் மகிழ்ந்து அலர்ந்திட
என்னைக்கண்டு என்னவள் இதழ்களும் விரிந்து
அலர்ந்ததே அல்லிபோல் அதிராது சிரித்து
அந்தி வேளையில் என்னுள்ளம் குளிர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Apr-19, 6:29 pm)
Tanglish : anthivelai
பார்வை : 67

மேலே