நாம்

புரியாத பார்வைகளில் என்னை நானே சந்தேகித்த தருணங்கள்...
உன் மௌனங்கள்..!
சில கணங்கள் பேசு என்கிறாய், அப்போது என் தொண்டைக் குழியில் விம்மி நிற்கும் சில வார்த்தைகள்... என்னை மீறி உதிர்ந்து உன்னை சினப்படுத்திடுமென்ற பயத்துடன்.., வெளிவர தயங்கித்தான் நின்றது..!
சில கணங்கள் அமைதியாய் இரு என்கிறாய், எனக்கும் புரியாமல் பார்க்கிறேன்..,
எதை பேசினாலும் கோபித்து கொள்கிறாய்..,
எதை உன்னிடம் பேச என்று யோசிக்கிறேன்..,
உன்னை வெறுத்து இல்லை 
நீ வெறுத்துவிடாமல் இருக்கவே ...
என்னை நீ நேசிக்கிறாய் என எனக்கு தெரியும்..,
நான் உனக்காய் என்னை மாற்றி கொள்கிறேன் என உணர்கிறாயா என்பதே எனக்கு தெரிய வேண்டும்..

எழுதியவர் : சரண்யா (12-Apr-19, 7:35 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : naam
பார்வை : 123

மேலே