டெட்ராய்ட் உணருயிர் கலைக்கூடம்

பறை தமிழர்களின் ஆதி இசை . அனைத்து காலங்களிலும் இது மக்களுக்கான இசையாக மட்டுமே இருந்துள்ளது . திணை வாரியாக தமிழர் வாழ்ந்த சங்க காலத்தில் இருந்தே தமிழரின் தனி அடையாளம் பறை . ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளாக ஒவ்வொரு பறையை கூறுகிறது தொல்காப்பியம் .

முல்லை - ஏறுகோட்பறை
குறிஞ்சி - தொண்டகப்பறை
மருதம் - மணமுழவுப் பறை ,நெல்லரிப்பறை
நெய்தல் - நாவாய்ப்பறை
பாலை - எறிப்பறை , ஆறலைப்பறை

இது மட்டுமில்லாமல் அரிப்பறை , உவகைப்பறை , கொடு கட்டி , குரவைப் பறை என 60 க்கும் மேலான பறை வகைகள் நம்மிடையே இருந்துள்ளன.

பறை இல்லை என்றால் அது ஊரே இல்லை என்கிறது இந்த புறநானூற்று பாடல்

"துடியன் , பாணன் , பறையன்
கடம்பன் என்று இந்நான்கல்லது
குடியும் இல்லை "

இந்த பாடல் வாசிப்பவரை குறிக்கிறது , சாதியை குறிக்கவில்லை . ஆதித்தமிழர் வாழ்வியலில் போர் , விலங்கு ,உழவு

எழுதியவர் : பாவி (13-Apr-19, 3:09 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 558

சிறந்த கட்டுரைகள்

மேலே