மெட்டி சத்தம்

தங்க மோதிரம் தந்தேன்
தனித்து நிற்க வேண்டாமென
தளிர்விரல் தனிலே,
உன் தங்க மனம் கண்டேன்
பொற்தாலியும் புனைந்தேன் ,
வண்ண வளையல்கள் செய்தேன்
உன் வாளிப்பான கைகளுக்கு,
வசந்தமென எனைத் தந்தேன்
உன் சுவாசமென பூஜிக்க ,
உன்கால் விரலில் மெட்டிசத்தம்
மென்மையின் நளினத்தில் ஒலிதர
தங்கத்தாலும் வெள்ளியாலும்
தந்தேன் மெட்டி தரத்துடன் ,
சிந்தித்தேன் என்னவளேஉன்னைவிட
பேரழகி உலகில் இன்றும் இல்லை, இனியும் இல்லை,
அன்போடு அரவணைத்தேன்
அடைக்கலமே நீயென்றாள்,
தூயதோர் அன்பில் துவண்டது மனம் இரண்டும் ,

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Apr-19, 12:11 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : metti sattham
பார்வை : 106

மேலே