பெரிய தலைவர்

என்னடா உங்க கட்சில ஆறு தலைவர்கள் இருக்கறாங்க? எல்லாருடய தலையும் பெரிசு பெரிசா இருக்குது.
@@@@
தலை பெரிசா இருக்கிறவங்களுத்தான் மூளை அதிகமா இருக்கும். சிந்திக்கும் திறனும் அதிகமாக இருக்கும். அதனால தான் பெரிய தலையோட
கட்சிக்குப் பல வருசம் உழைச்சு ஐம்பது வயசுக்கு மேற்பட்டவங்கதான் தலைவர் தேர்ததலில் கலந்துகொள்ளத் தகுதியுடையவர். அதோட கோடீஸ்வரரா இருக்கணும்.
@@@@@
ஆறு தலைவர்களில்ல ஒரு தலைவரோட தலை மற்ற தலைவர்கள் தலையைவிட பெரிசா இருக்குது. அவருடைய பதவிக்கு என்னடா பேரு?
@@@@@@
அவர 'பெரிய தலைவர்'னு சொல்லுவோம். தலை மட்டும் பெரிசா இருந்தா போதாது வழுக்கையாகவும் இருக்கணும்.
@@@@@
உங்கள் கட்சி ரொம்ப புதுமையான கட்சி யா இருக்குதடா.
@@@@
எங்கள் கட்சி புரட்சிக்கும் புதுமைக்கும் அடையாளம்டா.

எழுதியவர் : மலர் (13-Apr-19, 1:48 pm)
சேர்த்தது : மலர்1991 -
Tanglish : periya thalaivar
பார்வை : 123
மேலே