இசையே நீயடி

இசையே நீயடி [பாடல்]

நீ. . . . . வசையாய் ஆனாலும்
கசையாய் ஆனாலும் - உன்னை
இசையாய் இசைப்பேனடி
ஆசை அம்புலியே - என்
காதல் பொய் இல்லையே
கட்டவிழ்த்தாயே கண்களால்
காதல் அம்பை - காத்திருக்கிறேன்
பெறுவதற்கு உந்தன் அன்பை
நீயே நீயே என் ஜீவனடி
நாளும் நாளும் உன் சரணமடி
நெஞ்சுக்குள்ள நீயும் வந்து
பஞ்சுமெத்த போட்டுக்கிட்ட
அஞ்சுகமே உன்ன பார்த்து
ஏழு ஸ்வரம் நானும் மீட்ட
வானவில்லாய் வானவில்லாய்
எந்தன் வானில் நீயடி
காலமெல்லாம் கானமாக
எந்தன் நாவில் நீ தேனடி !
மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (13-Apr-19, 3:19 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : esaiyae neeyadi
பார்வை : 142

மேலே