மௌனம் ஏன் மலர்களே

மௌனம் ஏன் மலர்களே

மலர்களே. . . மலர்களே . . .
மௌனம் ஏன் கொண்டீர்கள்
மனசலனம் ஏன் பூண்டீர்கள்
மயக்குகின்ற மணத்தையும்
சுவைக்கின்ற தேனையும் கொண்ட மலர்களே
மனிதனை போல் - மாறா
சோகம் ஏன் கொண்டீர்கள் ?

காலை பொழுதினிலே
கன்னியர்கள் சூடி - பின்
மாலை பொழுதினிலே
மண்ணில் எரிவதாலோ ?
ஆடவரை மயக்க - அங்கையர்
உமை ஆயுதமாக கொண்டு
ஆசைகள் முடிந்ததும்
ஓசை இன்றி உமை ஒதுக்குவதாலோ ?

பூத்துக்குலுங்கும் உங்களை
பார்த்து பறித்து வந்து
படுத்து உறங்கும் மெத்தையிலிட்டு
ஈவு இரக்கமின்றி கசக்கி விட்டு
இறுமாப்பாய் எடுத்தும்மை
வீசுவதாலோ ?

மணக்கும் உங்களை சூடிக்கொண்டு
மயக்கத்திலே அணைக்கும்போது
மெல்லிய உங்கள் மேனி
காட்டுமிராண்டிகள் கரம்பட்டு
காயங்கள் கொள்வதாலோ ?

கல்யாண வைபோகம்
மஞ்சள் நீர் சுபசடங்கு
மாமனிதன் பாராட்டு விழா
அனைத்து நற்காரியங்களுக்கும்
உங்களுக்கு முதலிடம் கொடுத்து - பின்
உயிரடங்கி போன உடலுக்கும்
அழகுமலர் உங்களை போடுவதாலோ?
மலர்களே. .. மலர்களே. . .
உங்கள் மாண்பு தெரியாமல்
மகத்துவம் புரியாமல்
மனக்கலக்கம் வேண்டா
மானிடனாய் பிறந்த நான்
உங்களை போல மலராக
பிறக்காததை எண்ணிய ஏங்குகிறேன்

நீங்கள். . .
தொடாத பாவைகள் இல்லை'
படாத பாகங்கள் இல்லை
பூப்பெய்தும் பெண்டிற்கு
முதல் நாயகர்கள் நீங்களே
கன்னியர்கள் உள்ளத்தை கவர்கின்ற
காதலர்களும் நீங்களே!

மனைவியரை மயக்க
கணவர்களுக்கு உதவும்
காம மருந்தும் நீங்களே
சமத்துவம் என்பதை உங்களில் காணலாம் '
சாதிபேதம் பார்ப்பதில்லை
ஆதியந்தம் அறிவதில்லை
உயர்வு தாழ்வு கொள்வதில்லை
மலர்களே. . .
நீங்கள் ஒன்றுகூடி மாலையாகி
வாழ்விலும் தாழ்விலும்
உயர்வு கொள்வதும் நீங்களே
மலர்கள் நீங்கள் இல்லையேல்
மண்ணுலுகில் என்றும் சிறப்பிருக்காது .

மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (13-Apr-19, 3:24 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 146

மேலே