தமிழ் புத்தாண்டு

போற்றும் கல்வியுடன்
பாங்கான அறிவுடன்
நீண்ட ஆயுளுடன்
நீடித்த இளமையுடன்
உழைக்கும் ஆற்றலுடன்
தூங்காத துணிவுடன்
பார்போற்றும் பெருமையுடன்
நீங்கா பொன்னுடன்
அமுதசுரபி பொருளுடன்
அழியா புகழுடன்
நிலத்தின் பொறுமையுடன்
நன்மக்கள் பலரிருக்க
நல்லொழுக்கம் கற்றுத்தந்து
நோயின்மை கைவரப்பெற்று
முயற்சியென்ற முனைப்புடன்
வெற்றி வாகை சூடி
இத் தமிழர் புத்தாண்டில்
புதுவாழ்க்கை வாழ்ந்திட
அனைவருக்கும் அருள்வேண்டி
இறைவா நின்னை வேண்டுகின்றேன்...
அனைவருக்கும்
"இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

எழுதியவர் : சா.மனுவேந்தன் (13-Apr-19, 8:34 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : thamizh puthandu
பார்வை : 4663

மேலே