2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ----------இன்று ராம நவமி ------------- மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா ----------- யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்------------------------------தொகுப்பு

தமிழ், வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் விகாரி தமிழ் வருடப்பிறப்பு.

மங்களரகமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி 7 நிமிடத்துக்கு, 14.4.2019 அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அன்றைய தினம் சுக்ல பட்சத்தில், ஆயில்ய நட்சத்திரம் 2ம் பாதம், கடக ராசியில், கடக லக்னத்தில், நவாம்சத்தில் தனுசு லக்னம், மகர ராசியில் விகாரி புத்தாண்டு பிறக்கிறது.

சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் இளவேனில்காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதைப் போல, தமிழகத்தில் வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும்.




ஆண்டின் முதல் நாளில், வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும். மஞ்சள்,
குங்குமம் ஆகிய இரண்டு நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.


தமிழ் புத்தாண்டு நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை.தமிழ் புது வருட உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
---------------------------------------------------
இன்று ராம நவமி: இவற்றை செய்தால், பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்!
பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் ராம நவமி தினமாக கொண்டாடுகின்றனர்.

அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் 7ஆவது அவதாரமாக இந்துக்களால் நம்பப்படும் தெய்வீகத் தன்மை கொண்ட இராம பிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகை தான் ஸ்ரீ இராம நவமி என்றும் அறியப்படுகிறது. பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை நாடு முழுவதும் ராம நவமி தினமாக கொண்டாடுகின்றனர். இந்த தினத்தில் நாம் என்ன செய்தால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

இராம நவமி 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் இந்து சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் வருகிறது. ஆகையால் சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்று அழைக்கப்படுகிறது. மேலும், ஒன்பதாம் நாளின் இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் 10 நாட்களை முன் பத்து என்றும், பிறந்த தினத்திலிருந்து வரும் 10 நாட்களைப் பின் பத்து என்றும் 20 நாட்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ராமபிரானின் தீவிர பக்தர்கள், 10 நாட்களுக்கு முன்னரே இராமாயணத்தை படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து பொங்கல் நெய்வேத்தியம் படைத்து வழிபடுவார்கள்.


இந்த ராம நவமி தினத்தில் ஒவ்வொரு ராமர் கோயில்களிலும் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் பூஜைகள் செய்யப்படும். அந்தப் பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீராமரை வழிபடுவது சிறப்பாகும். ஒருவேளை பூஜையில் கலந்து கொள்ள முடியாதவர்கள், வீட்டின் பூஜையறையில் பட்டாபிஷேக இராமர் படத்தை வைத்து துளசியால் ஆன மாலையை அணிவித்து பூஜை செய்ய வேண்டும். அதோடு, பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்தால் நன்மைகள் பல உண்டாகும். மேலும், இராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, இராமாயணம் படிப்பதோ சிறந்தது.

ஸ்ரீராம பிரான் காட்டில் விசுவாமித்திரரோடு வாழ்ந்த சமயத்தில், தாகத்திற்காக நீர்மோரும், பானகமும் அருந்தினர். அதனால், நீர்மோரும், பானகமும் ஸ்ரீராமருக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. இந்த இரண்டுடன் சேர்த்து நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளை கூட நெய்வேத்தியமாக படைக்கலாம்.

ஸ்ரீராமருக்கு பூஜை செய்த பிறகு நெய்வேத்திய பொருட்களை நம் குழந்தைகளுக்கு உண்ண கொடுக்க வேண்டும். ஸ்ரீ ராம நவமியன்று காலை முதல் உணவு உண்ணாமல் இருந்து ஸ்ரீ ராம நவமி விரதமிருந்து ஸ்ரீ ராம பிரானை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிடைக்கும். மேலும், குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு வரும்.

வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும். இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம் என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.
===========================================================
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்றாலும், சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றது. அந்த வகையில் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

முன்னதாக கோயில் கம்பத்தடி மண்டபம் கொடி மரம் முன்பு அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட இன்று காலை 10.05 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.



மதுரையில் சித்திரை திருவிழா துவங்கியதையடுத்து தினமும் காலை, மாலை என இரு வேளையும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15ம் தேதி இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16ம் தேதி திக்விஜயமும், மீனாட்சி திருக்கல்யாணம் வரும் 17ம் தேதியும் , வரும் 18ம் தேதியன்று காலை மாசி வீதிகளில் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.


இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 19 ம் தேதி நடை பெறுகிறது. மதுரையில் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடும் சித்திரை திருவிழாவும் துவங்கியுள்ளதையடுத்து மதுரை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.
தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் யுகாதி தினம் வாழ்த்து
யுகாதி தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் பன்வாரில் லால் புரோஹித் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
----------------------------------------------------
யுகாதி திருநாள்: அரசியல் தலைவர் வாழ்த்து
தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி யுகாதி தினத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “யுகாதி” புத்தாண்டு திருநாள் நல் வாழ்த்துக்கள்.

பன்மொழி பேசும் மக்களும், பாரினில் ஒற்றுமையாக வாழலாம் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், பேசும் மொழி, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டில் வேறுபட்டு இருந்தாலும், உணர்வால் ஒன்றுபட்டு, காலங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக உறுதுணையாக வாழ்ந்து வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

மலரும் இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மன மார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பாரம்பரியமிக்க திராவிடக் குடும்பத்தினர் இனிய உறவை எவ்வித தொய்வும் இல்லாமல் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மதம், இனம், மொழி, சாதியால் நம்மை யாரும் பிரித்தாள அனுமதிக்க மாட்டோம் என்று இந்த யுகாதி நாளில் சபதம் ஏற்போம் என கூறியுள்ளார்.

எழுதியவர் : (14-Apr-19, 5:53 am)
பார்வை : 111

சிறந்த கட்டுரைகள்

மேலே