தலைப்புகள் தந்த கவிதை நீ

நொடிநேர மின்னல் பறித்தது
மனதை

தொலைந்த என் இதயத்தேடல்
தொடர

உன்னை கண்டதும் கண்டு
கொண்டது

உன்னிடமே என் இதயமென்று
தந்துவிடென்று

கேட்டுவிட துடித்த மனதை
துரிதமாயடக்கி

கேட்டுப் பெறவில்லையென்று
விளக்க சமாதானமனம்

விளக்கக்கடிதம் என்றொரு
விதி உண்டென

சொல்ல அதற்கும் தடைப்போட்டது என்னம்

எப்படிதான் என்நிலை தெரிய எனதவிக்க

இந்த தவிப்பும் சுகமாக
வருவது

வரட்டுமென்று வரவழைத்த தைரியத்தோடு சேர்ந்து

என்இதயம் நான் கேட்க
அழகாக

நீ சிரித்தாய் கவிதையாய்
ஒரேப்பார்வையில்

இவ்வளவா ஆச்சரியம் ஒவ்வொரு வரியிலும்

ஒருதலைப்பு உண்மைதான்

தலைப்புகள் தந்த கவிதைநீ

எழுதியவர் : நா.சேகர் (15-Apr-19, 12:40 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 173
மேலே