அவளின்றி நானில்லை

அவளின்றி நானில்லை

அவள் மீது பதித்தே
விழிக்கிறது
என் புலரலின் முதல் பார்வை….

என் நிகழ்ச்சி நிரல் தன்னை
இரு கரங்களில் ஏந்திக் கொண்டவளாய்
எக்கணமும் அவள்….

கடிவாளம் கட்டியவளாய்
வறிந்து கொண்டு சுழலுகின்றாள்
ஓர் வட்டந்தனில்
வாழும் நாளெல்லாம் எனக்காய்….

கணம் மாறும் கோணங்களால்
கரம் விரித்து விரட்டுகின்றாள்
என் பொழுதுகளை….

இவ்வாறாய் அவள் ஓட நான் ஓட
தடுக்கி விழுகின்றேன் உறக்கத்தில்
அலாரமணி அடித்து
அதட்டி எழுப்புகின்றாள்
அடுத்த நாள் ஓட்டம் காண…..
சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (15-Apr-19, 2:07 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 64
மேலே