கருமை நிறத்தில் பிறந்த மயிலினமே

காந்தார கலையால் வரைந்த ஓவியமே
கருமை நிறத்தில் பிறந்த மயிலினமே

வெண் சங்கு உனைக் கண்டு தன் நிறமிழந்து
விரும்புதடி கருமை பூசி காவியம் காண

புருவமது உன் முகத்தில் புது எழிலாய் உள்ளதடி
குண்டு கண்கள் அதில் அண்ட கோளாய் ஆனதடி

உன் முகம் பிடித்து முத்தம் பல கொடுத்து
செக்க சிவக்க வைத்து சிலாகிக்க வேண்டுமடி

விரல் பிடிக்க துடிக்கிறேன் மடல் விரிந்த மல்லிகையே
மடல் மலையாய் வரைந்துள்ளேன் மனம் மாறுவாயோ
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (15-Apr-19, 6:50 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 216

மேலே