பஜ கோவிந்தம் சுலோகம் 3 , 4

" பஜ கோவிந்தம் " சுலோகம் 3 , 4
**************************************************************
சுலோகம் 3 கருத்து
********************************
பெண்ணவளின் மார்பகங்கள் மற்றும் தொப்புள் அழகையும் கண்டு அதில் மதிமயங்கி
பரவசம் அடையாதே . இவைகள் அத்தனையும் புலால் மற்றும் கொழுப்பு ஆகியவற்றின்
வேறுபட்ட உருவங்களே தவிர வேறொன்றுமில்லை என்று மனதில் கொள்வாயாக .

பாடல் வரிகளில்
*************************
" பெண்ணவள்தன் மார்பகம் தொப்புளிவை நோக்க
காணுமிவை புலால்வழி உருவங்கள் என்றெண்ணி
மண்ணாகு மிம்மோகத்தை என்றும்நீ கொள்ளாது
மனதினில் கண்ணனை நன்கே நிலைநிறுத்தி
கோவிந்தன் புகழ்தன்னை பாடுவீர் பாடுவீரே "

சுலோகம் 4 .
******************
கருத்து = தாமரை இலைமேல் நிற்கும் நீர்த்துளி ஒரு இடத்தில நிற்காது .அது போன்றதுதான்
வாழ்க்கையும் . ஊமையாய் அகங்காரம் , சடம்பு போல நோய் நொடிகள் இவைகளின்
பிடியில் இவ்வுலகம் இருக்கிறது துன்பத்தால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது
என்றெண்ணி அவைகளைய கோவிந்தனைப் பாடுங்கள்

பாடல் வரிகளில்
**************************
" தாமரையில் நீர்த்துளிபோல் வாழ்வுமொரு அதிசயமே
காமநிலை ஆசையும் அதுபோல என்றெண்ணி
ஊமையாம் அகங்காரம் கனவுநிலை கொள்ளாது
கூர்மனவன் தாள்தன்னை பற்றற்று பற்றியே
பரமனவன் புகழ்தனை பாடுவீர் பாடுவீரே !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Apr-19, 7:47 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 24
மேலே