சாய்வது நேர்படின்

சாய்வது நேர்படின்

எவ்வளவு சிமிட்டினும்

இமைகள் எந்நாளும் களைக்காது


எவ்வளவு அகழினும்

பூமி எந்நாளும் துவளாது


எவ்வளவு புதைக்கினும்

இடுகாடு எந்நாளும் உயராது


எவ்வளவு புசிக்கினும்

உயிரினங்கள் வயிறு நிரம்பாது


எவ்வளவு முயன்றாலும்

காற்றோடு உருவம் தெரியாது


கடவுளே காட்சித் தருவினும்

காசின் முன் ஆசி வெல்லாது


மட்டற்ற மகிழ்வுகள் கிடைப்பினும்

மதங்களின் அழிப்பு நடக்காது


பூமியின் சாய்வது நேர்படின்

உலக உயிர்கள் எதுவுமே வாழாது.

--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (16-Apr-19, 10:24 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 24

மேலே