காதல்

பசுந்தங்க நூலிழையால் நெய்த
பட்டுப் புடைவை, வித விதமாய்
நுணுக்க கைவேலைகள் பேசும்
தங்க, வைர வைடூரிய ஆபரணங்கள்
இவை அத்தனையும் என்னை
மகிழ்விக்க நீ தந்து கொடுத்தாலும்
அன்பே இவற்றில் ஒன்றுகூட
என் நெஞ்சை ஒரு நாளும் தொட்டுவிடடாது
என்மீது நீ காட்டும் உன் உளமார்ந்த
அன்பும் பரிவும் மட்டுமே என் உள்ளத்தை
தொடும் தொட்டு காதல் கீதம் இசைக்கும்
மற்றவையெல்லாம் உடலோடு மட்டுமே
உறவாடி மனத்தோடு பேசாது இருந்துவிடும்
பகட்டான இருந்தும் உளம் நெகிழ வைக்காது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Apr-19, 1:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 391

மேலே