என் இனிய சகியே

ஒரு நாள் நீ பிரிவை வேண்டினாய்
நான் மறுக்காமல் கொடுத்தேன்

ஒரு நாள் இதயம் வேண்டினாய்
அப்போதும் எனக்கு ஆட்சேபனையில்லை

உன் நினைவுகளை நிறுத்திவிடச்சொல்லி
நீ ஒன்றும் கூறவில்லை
அது பற்றி உனக்கு எந்த அக்கறையுமில்லை

நீ கவனித்துக்கொண்டேயிருந்தாய்
நான் என் பயணப்பையில் உன் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொள்ளவேயில்லை
உனக்கு வருத்தமாக இருந்தது
நீ உடுத்திய ஆடையை கொடு உன் ஞாபர்த்தமாக எடுத்துச்செல்ல
என்றதும்
உன் முகத்தில் அவ்வளவு பூரிப்பு
இதற்குதானே இவ்வளவு நேரம் நடித்ததும்

எதையும் மறக்கவில்லையே என திரும்ப திரும்ப கேட்கும்வரை
எனக்கு புரியவில்லை
கடைசியாக உன் கிசுசிப்பான குரலில் கேட்டாயே
எதையும் மறக்கவில்லையாயென அப்போதான்
நான் முக்கியமானதை மறந்துவிட்டது நினைவுக்கு வந்தது
பிறகு இருவர் உதடுகளும் நீண்டநேரம் வார்த்தையில்லாமல்
நிறைய பேசிக்கொண்டன

எழுதியவர் : விஸ்வா மதுரை. (16-Apr-19, 2:51 pm)
சேர்த்தது : viswa
Tanglish : en iniya sakiye
பார்வை : 290
மேலே