காதல்

நதியில் நீந்தி குளித்துவிட்டு
ஈரத்தலையைக் கோதிவிட்டு
கார்மேகக் கூந்தலைக் கட்டி
கொடியில் வாரி கட்டிஅடக்கி
அங்கு பூத்துக் குலுங்கும்
மல்லிகைப்பூவைப் பறித்து தொடுத்து
தலையில் சூடிக்கொள்கிறாய்
ஐயோ , நான் என் அந்த மல்லிகைப்பூ
ஆக வில்லையே உன்னைத்தொட்டு இன்பமுற
ஈரம் காய மேலாக்கை பிழிந்து
மேனியில் உடுத்தி பொங்கும்
இளமேனி அழகை மறைக்கப் பார்க்கிறாய்
அய்யகோ உந்தன் மேலாக்கின்மேல் எனக்கு பொறாமை
நான் ஏன் அந்த சிற்றாடையாய் மாறவில்லை
உன்னைக்கட்டி தழுவி உறவாட
உன் சிற்றிடையில் லகுவாய்த் தாங்கிவருகிறாயே
தண்ணீர்க்குடம் அத்துடன் நீ காலணிகூட
ஏதுமில்லாது கொலுசு ஓசையோடு
ஒய்யாரமாய் வரும் நடை அழகு
நீயென்ன தேவலோக கன்னியா என்று
நினைக்க தோன்றுதடி
நான் ஏன் அந்த குடமாய் இன்னும்
மாறவில்லையே உந்தன் பட்டு மேனியைத்
தொட்டு சுகம் காண
உனக்காகவே காத்திருக்கும் பரிசம்போட்ட
உந்தன் அத்தை மகன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Apr-19, 9:07 pm)
Tanglish : kaadhal
பார்வை : 197

மேலே