திருக்குறள் ஒரு வழிநூலா கவிஞர் இரா இரவி

திருக்குறள் ஒரு வழிநூலா?

கவிஞர் இரா. இரவி.

******

மது உண்ட மந்தி போல உளறுகின்றார்
மகளை அம்மாவிற்க்கு மூத்தவள் என்கிறார் !திருக்குறளின் கருத்துக்கள் வேதத்தில் இருக்க
திருப்பி உரைக்கின்றார் வேதக்கருத்து திருக்குறளிலாம் !உலகப்பொதுமறையில் உள்ள உயர்ந்த கருத்துக்களை
உங்கள் வேதத்தில் காப்பியடித்து விட்டு !வேதத்திலிருந்து வந்தது திருக்குறள் என்று
வேதாளம் வேதாந்தம் பேசுகின்றது முறையா?வேதத்தில் கடவுள் பெயர்கள் உண்டு
வளமான திருக்குறளில் கடவுள் பெயர்கள் இல்லை !தமிழ் தமிழர் தமிழ்நாடு என்று எழுதாமலே
தரணியில் முத்திரை பதித்தது திருக்குறளே !உலகமொழி யாவிலும் உள்ளது திருக்குறள்
உலகமொழிகளில் உள்ளதா? உங்கள் வேதம்!வர்ண பேதம் நியாயம் கற்பிக்கும் வேதம்
வர்ண பேதத்தை தகர்த்து எறியும் திருக்குறள்!வழக்கொழிந்து போய்விட்டது வேதம்
வழக்காடு மன்றத்திலும் வாழ்வது திருக்குறள் !பெரும்பான்மையோர் அறிந்திட்ட அரிய நூல் திருக்குறள்
சிறுபான்மையோரும் பலரும் அறியாதது வேதம் !ரசியாவின் டல்சன் அறையில் உள்ளது திருக்குறள்
ரசியாவில் யாருமே அறியாத ஒன்று வேதம்1கண்டபடி உளறுவதை விட்டுவிட்டு உடன்
கைகட்டி திருக்குறளைப் படிக்கத் தொடங்குக!

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Apr-19, 10:30 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 29

மேலே