கேலிக்கூத்து

தேர்தல் திருவிழா கல்லா
கட்டியவர்கள்

ஜில்லாவுக்கு கோடி என்று
ஒதுக்க

போட்டி மனப் பான்மையில்
காட்டிக்கொடுத்தல்

கோடி கோடியாய் பிடிபட

தெருக்கோடியில் நாங்கள்
மிதிபடுகின்றோம்

கடந்த தேர்தலுக்கும் இராப்
பகலா

வலைவீசிப் பிடித்தார்கள்
என்ன ஆனாது?

அரசியல்வாதியின் வாக்குறுதி
போல

நாங்களும் அதை மறந்துவிட்டோம்

பாவம் அதிகாரிகள் பரிதாபம்
நீதிதுறை

கடன் சுமையில் நிதிதுறை
முட்டாள் மக்கள்

மீண்டும் ஒரு வாக்களிப்புக்கு

வாழ்க ஜனநாயகம்
வளர்க பண நாயகம்

எழுதியவர் : நா.சேகர் (17-Apr-19, 8:33 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 19

புதிய படைப்புகள்

மேலே