அனைவரும் வாக்களிப்போம்

கிழிந்த
இந்தியாவிற்கு
நாம் போடும் ஒட்டு
ஓட்டு

ஓட்டுப் போட்டதும்
ஏழையின் விரல் மை
இரு நாளில்
அழிகின்றது
இவன் வறுமை
இறுதிவரை
அழிவதில்லை

வேட்டு
வைப்பதால்
அவன் பெயர்
வேட்பாளர்

வாக்காளன்
வாக்கு அளிக்கிறான்
வேட்பாளன்
வாக்குப்படி எதையும்
அளிப்பதில்லை

கரை படிந்த
அவர்களின்
நெஞ்சின் மீது
கரைபடியாத
வெள்ளை ஆடை

கொள்ளைக்காக
கொள்கை இழப்பவர்கள்

மக்களின்
விரல்களில்
கருமை தடவி
நாட்டின்
முகத்தை கருமை
ஆக்குவதே தேர்தல்

நேர்மைக்கு வாக்களிப்போம்

எழுதியவர் : புதுவைக் குமார் (17-Apr-19, 9:45 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 58

மேலே